19 வயதுக்குட்பட்ட ஆடவர் உலக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் ஒளிபரப்பு ஏற்பாடுகளின் விபரங்களை சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் இன்று முதல் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
அனைத்து (41) போட்டிகளும் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் இரசிகர்களுக்கு நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளன.
நேரடி ஒளிபரப்பு விபரம்;
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (இந்தியா), அமெசன் (அவுஸ்திரேலியா), ஸ்கை ஸ்போர்ட்ஸ் (பிரித்தானியா), சுப்பர் ஸ்போர்ட் (ஆபிரிக்கா), கிரிக்லைஃப் (மத்தியகிழக்கு), வில்லோ (அமெரிக்கா மற்றும் கனடா) ஈஎஸ்பிஎன் (கரீபியன் தீவுகள் மற்றும் தென் அமெரிக்கா), ஸ்கை ஸ்போர்ட் (நியூசிலாந்து).
இலங்கை உள்ளிட்ட ஏனைய பிராந்தியங்களில் போட்டிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படமாட்டாது என்பதோடு, இரசிகர்கள் போட்டிகளை சர்வதேச கிரிக்கெட் பேரவையின் OTT தளமான ICC.tv’இல் இலவசமாகப் பார்க்க முடியும், இது உலகம் முழுவதும் உள்ள அனைத்து போட்டிகளின் நேரடி ஒளிபரப்பை உறுதி செய்கிறது.

