2034 ஆடவர் கால்பந்து உலகக் கிண்ணப் போட்டிகள் சவுதி அரேபியாவில் நடைபெறும்.
ஸ்பெயின், போர்த்துகல் மற்றும் மொரோக்கோ ஆகியவை 2030 போட்டிகளை இணைந்து நடத்துமென சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் (பிபா) உறுதிப்படுத்தியுள்ளது.
போட்டியின் 100 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் 2030 போட்டியில் மூன்று போட்டிகள் ஆர்ஜென்டினா, பரகுவே மற்றும் உருகுவே ஆகிய நாடுகளிலும் நடைபெறும்.
வாக்கெடுப்புக்குப் பின்னர், நேற்று இடம்பெற்ற விசேட பிபா காங்கிரஸ் கூட்டத்தில் இரண்டு உலகக் கிண்ணங்களுக்குமான இடங்கள் உறுதி செய்யப்பட்டன.
