ஐபிஎல் 2024: 21 போட்டிகளுக்கான அட்டவணை வெளியானது

2024ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிறிமியர் லீக் (ஐபிஎல்) தொடருக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மார்ச் 22 ஆரம்பமாகும் முதல் ஐபிஎல் போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது பெங்களூரு.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17ஆவது தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முதல் 21 போட்டிகளுக்கான கால அட்டவணை மாத்திரம் வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காலக்கட்டங்களிலேயே ஐபிஎல் தொடரின் போட்டிகளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஐபிஎல் அட்டவணை முழுவதுமாக அறிவிக்கப்படாமல், மார்ச் 22 – ஏப்ரல் 7 வரை நடைபெறவுள்ள 21 போட்டிகளுக்கான கால அட்டவணை மாத்திரம் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் திகதி அறிவிப்புக்கு பின் முழு அட்டவணையும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest articles

Similar articles