அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மெக்ஸ்வெல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வருட இறுதியில் அவுஸ்திரேலியாவின் உலகக் கிண்ண வெற்றியில் முக்கிய பங்கு வகித்த மேக்ஸ்வெல், பிப்ரவரியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இருபதுக்கு-20 தொடருக்கு முன்னதாக அவுஸ்திரேலிய அணியுடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
“கிரிக்கெட் அவுஸ்திரேலியா வார இறுதியில் அடிலெய்டில் கிளென் மெக்ஸ்வெல் சம்பந்தப்பட்ட ஒரு சம்பவத்தை அறிந்திருக்கிறது, மேலும் தகவல்களை ஆராய்கின்றோம்” என கிரிக்கெட் அவுஸ்திரேலியா அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மெக்ஸ்வெல் கடந்த வெள்ளிக்கிழமை அடிலெய்டில் வெளியே சென்ற பின்னர அம்பியுலன்சில் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. (News.Co.Au)
