எமிரேட்ஸ் கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்புச் சட்டத்தை மீறிய, மூன்று குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்ட பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் நசீர் ஹொசைன் அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஆறு மாதங்கள் இடைநீக்கத்துடன் இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளார்.
செப்டம்பர் 2023இல் சர்வதேச கிரிக்கெட் பேரவையால் குற்றம் சாட்டப்பட்ட (எமிரேட்ஸ் கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்புச் சட்ட விதிகளுக்கு அமைய) ஹொசைன், மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார்.
குற்றச்சாட்டு 01- 2.4.3 மீறல் – நியமிக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு அதிகாரிக்கு (தேவையற்ற தாமதமின்றி) 750 டொலருக்கு மேல் மதிப்புள்ள அவருக்கு வழங்கப்பட்ட பரிசுக்கான (புதிய ஐபோன் 12) ரசீதை வெளிப்படுத்தத் தவறிவிட்டார்.
குற்றச்சாட்டு 02 – 2.4.4 மீறல் – புதிய ஐபோன் 12 மூலம் ஊழல் நடத்தையில் ஈடுபட அவர் பெற்ற அணுகுமுறை அல்லது அழைப்பின் முழு விபரங்களையும் நியமிக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு அதிகாரியிடம் அவர் வெளிப்படுத்தத் தவறிவிட்டார்.
குற்றச்சாட்டு 03 – 2.4.6 மீறல் – சாத்தியமான ஊழல் நடத்தை தொடர்பாக நியமிக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு அதிகாரியின் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. ஊழல் எதிர்ப்பு அதிகாரியால் கோரப்பட்ட எந்தவொரு தகவல் மற்றும் ஆவணங்கள் துல்லியமாகவும் முழுமையாகவும் வழங்கவில்லை.
நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் திகதி சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் விளையாட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
