கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டு சிம்பாவ்பே அணி இலங்கையை வந்தடைந்துள்ளது.
இலங்கையுடான சர்வதேச ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 தொடரில் பங்கேற்கவுள்ள சிம்பாவ்பே குழாம் நேற்று (04) அதிகாலை நாட்டிற்கு வருகைத்தந்தது.
இலங்கை மற்றும் சிம்பாவ்பே அணிகள் 3 சர்வதேச ஒருநாள் மற்றும் 3 சர்வதேச இருபதுக்கு-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதுடன் தொடரின் சகல போட்டிகளும் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளன.
இரண்டு அணிகளுக்குமிடையிலான முதல் சர்வதேச ஒருநாள் போட்டி நாளை (06) நடைபெறவுள்ளது.
இலங்கை – சிம்பாவ்பே கிரிக்கெட் தொடருக்கான உள்நாட்டு ஒளிபரப்பு உரிமத்தை MTV செனல் தனியார் நிறுவனம் பெற்றுள்ளது.
தொடரின் சகல போட்டிகளையும் TV 1 தொலைக்காட்சியில் பார்வையிட முடியும்.
https://twitter.com/ZimCricketv/status/1742582042565746768
