இந்திய கிரிக்கெட் அணி விசித்திரமான சாதனை

இந்திய கிரிக்கெட் அணி விசித்திரமான சாதனை ஒன்றைப் படைத்துள்ளது.

153 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்திருந்த இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களிலேயே எஞ்சிய அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி எவ்வித ஓட்டங்களையும் பெறாமல் 6 விக்கெட்டுகளை இழந்தது இதுவே முதல் முறையாகும்.

லுங்கி என்கிடி முதலில் கே.எல் ராகுலை வீழ்த்தினார். அதே ஓவரில் ரவீந்திர ஜடேஜாவும், ஜஸ்பிரிட் பும்ராவும் வெளியேறினர். அடுத்த ஓவரில், விராட் கோஹ்லி மற்றும் பிரசித் கிருஷ்ணாவை ககிசோ ரபாடா ஆட்டமிழக்கச் செய்தார். முகேஷ் குமார் ரன் அவுட் ஆனார். 11 பந்துகளுக்குள் இந்தியா கடைசி 6 விக்கெட்டுகளை எவ்வித ஓட்டங்களையும் பெறாமல் இழந்தது.

தென்னாபிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்டின் முதல் நாளில் தென்னாப்பிரிக்காவை 55 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்த இந்தியா, தனது முதல் இன்னிங்ஸில் 153 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

Latest articles

Similar articles