ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல்

செங்கடல் பகுதியில் சரக்கு கப்பலொன்றை கைப்பற்ற முயன்ற ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் படகுகள் மீது அமெரிக்க ஹெலிக்கொப்டர்கள் தாக்குதலை மேற்கொண்டு அவற்றை அழித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சரக்கு கப்பலொன்றின் மீது தாக்குதலை மேற்கொண்டவாறு ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நான்கு படகுகள் அந்த கப்பலை கைப்பற்ற முயன்ற கப்பலுக்கு அருகில் நெருங்கி சென்றதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

அவசர அழைப்பை செவிமடுத்த அமெரிக்க போர்க்கப்பல்களில் இருந்து ஹெலிக்கொப்டர்கள் உதவிக்கு விரைந்துள்ளன.

மூன்று படகுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதோடு, மூன்று படகுகள் மூழ்கடிக்கப்பட்டதாகவும், அவற்றிலிருந்தவர்கள் கொல்லப்பட்டதாகவும் அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

நான்காவது படகு தப்பிச்சென்றுவிட்டது என அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை தங்களின் எச்சரிக்கையை குறிப்பிட்ட வர்த்தக கப்பல் செவிமடுக்க மறுத்தது என தெரிவித்துள்ள ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள், தங்களின் அமைப்பை சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

நவம்பர் மாதம் முதல் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதல்களைமேற்கொண்டு வருகின்றனர். இதுவரையில் 100ற்கும் மேற்பட்டஆளில்லா விமானத் தாக்குதல்களையும் ஏவுகணை தாக்குதல்களையும் மேற்கொண்டுள்ளனர். (virakesari.lk and reuters.com)

Latest articles

Similar articles