15,000 கோடி பெறுமதியான அரண்மனை, 700 கார்கள்; உலகின் பணக்கார குடும்பம்

GQ சஞ்சிகையின் அண்மைய தகவல்களுக்கு அமைய, துபாயின் அல் நஹ்யான் அரச குடும்பம் உலகளவில் பணக்கார குடும்பமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

15,678 கோடி ரூபாய் மதிப்புள்ள அரச தலைவர் மாளிகை, தனியார் ஜெட் விமானங்கள் மற்றும் புகழ்பெற்ற மன்செஸ்டர் சிட்டி கால்பந்து கழகத்தின் உரிமையைக் கொண்ட இந்த குடும்பம் உலக அரங்கில் இணையற்ற செல்வ செழிப்புடன் காணப்படுகிறது.

18 சகோதரர்கள், 11 சகோதரிகள், ஒன்பது குழந்தைகள் மற்றும் 18 பேரக்குழந்தைகள் அடங்கிய ஒரு பெரிய குடும்பத்தை நிர்வகிக்கின்றார் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Mohammed bin Zayed Al Nahyan)

அவர்களின் உலகளாவிய நிதி செல்வாக்கின் குறிப்பிடத்தக்க வெளிப்பாடாக, அல் நஹ்யான் குடும்பம், உலகின் எண்ணெய் இருப்புகளில் சுமார் ஆறு சதவீதத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் புகழ்பெற்று விளங்குகிறது.

ரிஹானாவின் பென்டி பியூட்டி (Fenty beauty), எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) வரை பல்வேறு தொழில்களில் இந்த குடும்பம் முதலீடுகளைக் கொண்டுள்ளது.

குடும்பத்தின் முக்கிய உறுப்பினரான ஷேக் ஹமத் பின் ஹம்தான் அல் நஹ்யான் ( (Sheikh Hamad bin Hamdan Al Nahyan)) 700ற்கும் மேற்பட்ட கார்களை வாங்கிக் குவித்துள்ளார். இவை அனைத்தும் மிக விலையுயர்ந்த கார்களாகும்.

அபுதாபியை தளமாகக் கொண்ட குடும்பத்தின் முக்கிய வீடு காஸ்ர் அல்-வதன் (Qasr Al-Watan) ஜனாதிபதி மாளிகையாகும், இது அமைதியான சூழலில் அமைந்துள்ளது. ஏறக்குறைய 94 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கிறது. இது விலைமதிப்பற்ற வரலாற்று கலைப்பொருட்களுக்கான களஞ்சியமாகவும் காணப்படுகிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எல்லைகளுக்கு அப்பால், துபாய் அரச குடும்பம் பரிஸ் மற்றும் லண்டனில் உள்ள மதிப்புமிக்க இடங்கள் உட்பட, உலகளவில் செழுமையான சொத்துக்களைக் கொண்டுள்ளது.

2008 ஆம் ஆண்டில், ஷேக் மொஹமட் பின் சயீத் அல் நஹ்யானின், அபுதாபி யுனைடெட் குரூப் 8,158 கோடி ரூபாய்க்கு பிரித்தானிய கால்பந்து அணியான மன்செஸ்டர் சிட்டியை கொள்வனவு செய்தது.

அரச குடும்பத்தின் தனியார் ஜெட் விமானங்கள் உண்மையிலேயே அசாதாரணமானது.

ஏர்பஸ் ஏ320-200 மற்றும் மூன்று போயிங் 787-9 உட்பட மொத்தம் எட்டு விமானங்கள் இந்த குடும்பத்திற்கு சொந்தமானது.

அரச தலைவரின் தனிப்பட்ட சேகரிப்பில் 478 டொலர் மில்லியன் மதிப்புள்ள போயிங் 747 மற்றும் 176 மில்லியன் டொலர் மதிப்புள்ள போயிங் 787 ஆகியவை அடங்கும். இந்த ஆடம்பரமான ஜெட் விமானங்களில் பல அறைகள், சந்திப்பு அறைகள், பொழுதுபோக்கு இடங்கள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

கலை மற்றும் கலாச்சாரத்திற்கான அவர்களின் அர்ப்பணிப்புக்கு சான்றாக, அல் நஹ்யான் குடும்பம் அபுதாபியில் லூவ்ரே அருங்காட்சியகத்தைத் திறந்தது, இது அரேபிய தீபகற்பத்தில் மிகப்பெரியது.

இந்த அற்புதமான அருங்காட்சியகம் மேற்கத்தேய மற்றும் கிழக்கு கலைகளுக்கு இடையே ஒரு பாலமாக செயல்படுகிறது, குறிப்பிடத்தக்க தலைசிறந்த படைப்புகள் உள்ளன.

அபுதாபி அரச குடும்பம் உலகின் முதல் பத்து பெரிய படகுகளில் மூன்றை தன்வசம் வைத்துள்ளது.

உலகளவில் மிகப் பெரிய அஸ்ஸாம், ஷேக் கலீபாவுக்காக தனிப்பயனாக்கப்பட்டது, 180 மீட்டர் நீளம் மற்றும் 100 பேருக்கு மேல் தங்கும் வசதியுடன் மைதானம், கலியாட்ட விடுதிகள் என பல வசதிகளைக் கொண்டது. (The Economic Times)

Latest articles

Similar articles