எலான் மஸ்கின் ‘ஸ்டார்லிங்க்’ சேவை இந்தியாவில் கால் பதிக்கிறது

சட்டிலைட் மூலம் இணைய சேவை வழங்கும் எலான் மஸ்கின் ‘ஸ்டார்லிங்க்’ சேவை இந்தியாவில் தனது சேவையை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கான அனுமதியை அரசு கூடிய விரைவில் வழங்க உள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது ஸ்பேஸ்-X நிறுவனம். இந்நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் திட்டம் வழியே சுமார் 70 நாடுகளில் சட்டிலைட் மூலம் அதிவேக இணைய சேவையை வழங்கி வருகிறது. அதற்கான அங்கீகாரத்தையும் ஸ்பேஸ்-X பெற்றுள்ளது.

உலகம் முழுவதும் இந்த சேவையை விரிவு செய்வதே அந்நிறுவனத்தின் நோக்கம். இந்நிலையில், ஸ்டார்லிங்க் இணைய சேவை இந்தியாவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு முன்னதாக பலமுறை இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அண்மையில் இந்தியாவின் தனியார் டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான வொடபோன் ஐடியா நிறுவனம், ஸ்டார்லிங்க் உடன் வர்த்தக ரீதியாக இணைய உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இந்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறையின் நம்பிக்கையை ஸ்டார்லிங்க் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ சட்டிலைட் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஒன்வெப்பை அடுத்து சட்டிலைட் சார்ந்த தகவல் தொடர்பு சேவைக்காக உரிமம் பெறவுள்ள மூன்றாவது நிறுவனமாக ஸ்டார்லிங்க் திகழ்கிறது.

உரிமம் வழங்கப்பட்டால் இந்திய தொலைத்தொடர்பு துறையில் புதிய வகையிலான முன்னேற்றம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான உரிமம் இறுதிகட்டத்தில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Latest articles

Similar articles