அடுத்தடுத்து படங்கள், சுழலும் உலநாயகன்

‘விக்ரம்’ படத்திற்குப் பின் பிரபாஸின் ‘கல்கி 2898 ஏ.டி’ மற்றும் பிக் பாஸ் சீசன் 7 படப்பிடிப்புகளில் கவனம் செலுத்தினார் கமல். இடையே எச்.வினோத், மணிரத்னம் இருவரின் இயக்கத்தில் நடிப்பதாக அறிவித்தார். அதன்படி மணிரத்னம் இயக்கத்தில் உருவாக உள்ள ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் கமலின் 237ஆவது படத்தை இரட்டையர்களான அன்பறிவ் இயக்குகின்றனர் என உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது.

கமலின் திரைப்பயணத்தில் ‘விக்ரம்’ படத்திற்குப் பிறகு இயக்குநர்கள் எச்.வினோத், மணிரத்னம் ஆகியோரின் படங்களில் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகின. அதன் முன்னோட்ட வீடியோக்களும் வெளிவந்தன. கமலின் பிறந்த நாள் ஸ்பெஷலாக ‘தக் லைஃப்’ அறிவிப்பும் வெளியானது. இது கமலின் 234ஆவது படமாகும்.

ஷங்கரின் இயக்கத்தில் கமல் நடித்துவரும் ‘இந்தியன் 2’ கமலின் 231ஆவது படமாகும். இந்தப் படத்தை ஏப்ரலுக்குக் கொண்டுவரத் திட்டமிடுகின்றனர். 232ஆவது படம்தான் ஏற்கனவே வெளியான ‘விக்ரம்.’ 233ஆவது படத்தைத்தான் முதலில் எ.வினோத் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. 234ஆவது படமாக ‘தக் லைஃப்’ உருவாகிவருகிறது. தொடர்ந்து பிரபாஸுடன் கமல் நடித்துவரும் ‘கல்கி 2898 AD’ அவரின் 235வது படமாகும். இதற்கிடையே ‘இந்தியன் 3’ஆவது பாகமும் ரெடியாகி வருவதால் அதுவே கமலின் 236வது படமாகக் கருதப்படுகிறது. இதற்கடுத்த படமே அன்பறிவ் இயக்கும் இந்தப் படமாகும்.

‘தக் லைஃப்’ படத்தில் த்ரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி எனப் பலரும் நடிக்கின்றனர். பிக் பாஸ் நிறைவடைந்துவிட்டதால் கமல் இப்போது ‘தக் லைஃப்’ படப்பிடிப்புக்கு வருகிறார். இது ‘நாயகன்’ படத்தின் தொடர்ச்சி என்றும், ‘பீரியட் பிலிம்’ அல்ல என்றும் சொல்லப்பட்டது.

ஆனால், படக்குழுவினர் இரண்டையுமே இப்போது மறுத்து வருகின்றனர். கடந்த டிசம்பரிலேயே படப்பிடிப்பு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெப்ரவரி முதல் வாரத்திற்குள் படப்பிடிப்பு தொடங்கலாம் என்கிறார்கள்.

இதற்கிடையே பிரபாஸுடன் நடித்த ‘கல்கி 2898 AD’ மற்றும் ஷங்கரின் ‘இந்தியன் 2’ படப்பிடிப்புகள் நிறைவடைந்துவிட்டன. ‘தக் லைஃப்’பை முடித்துவிட்டு ‘தீரன் – அதிகாரம் ஒன்று’ இயக்குநர் அ.வினோத்தின் படத்திற்குக் கமல் வரலாமெனத் தெரிகிறது.

சண்டைப் பயிற்சியாளர்களான அன்பறிவ் கைவசம், இப்போது நிறைய படங்கள் இருக்கின்றன. ‘இந்தியன் 2’, ‘கல்கி 2898’, ‘தக் லைஃப்’, ‘வேட்டையன்’, ‘தலைவர் 171’, ‘கேம் சேஞ்சர்’ எனப் பல படங்களுக்கு அவர்கள் சண்டைக் காட்சி அமைத்துவருகின்றனர். அவர்களது இந்த வேலைகள் முடிந்த பிறகே, கமல் படத்தைத் தொடங்குவார்கள் என்கிறார்கள். அநேகமாக ஒக்டோபருக்குப் பின்னர் ‘கமல் 237’ நடக்கும் எனச் சொல்லப்படுகிறது. (Cinemavikatan)

Latest articles

Similar articles