மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கின்றார் செல்வராகவன். 2022ஆம் ஆண்டு தன்னுடைய தம்பி தனுஷை வைத்து ‘நானே வருவேன்’ என்ற படத்தை இயக்கிய செல்வராகவன் தொடர்ச்சியாக நடிப்பு மீது கவனம் செலுத்தி வந்தார்.
இந்த நிலையில் செல்வராகவான் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் திரைப்படம் குறித்தான அறிவிப்பு நேற்று வெளியாகியிருக்கிறது. இப்படத்திற்கு `மெண்டல் மனதில்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்திற்கு ஜி.வி இசையமைக்கிறார். அதுமாத்திரமல்ல, அவரே இத்திரைப்படத்தை தயாரிக்கிறார். செல்வராகவன் இயக்கத்தில் வெளியான `ஆயிரத்தில் ஒருவன்’, `மயக்கம் என்ன’ திரைப்படங்களுக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
அத்திரைப்படங்களுக்கு இசையமைத்த நினைவுகள் குறித்து சமீபத்திய செவ்வியில் ஜி.வி பகிர்ந்த விடயங்கள் பரவலாக பேசப்பட்டது.
‘மெண்டல் மனதில்’ திரைப்படத்தை தாண்டி ‘கிங்ஸ்டன்’, ‘இடி முழக்கம்’, ‘ப்ளாக் மெயில்’ போன்ற திரைப்படங்களையும் தன்னுடைய கையில் வைத்திருக்கிறார் ஜி.வி.
இத்திரைப்படத்தின் அறிவிப்பு தொடர்பாக பதிவிட்டுள்ள ஜி.வி, “இது செல்வராகவனுடைய லவ் ஸ்டோரி. இத்திரைப்படம் லவ் மியூசிகல் ஜர்னியாக இருக்கும். இந்த லெஜெண்ட்டுன் மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி!” எனப் பதிவிட்டிருக்கிறார்.
