பிரான்ஸின் புதிய பிரதமர் 34 வயது கேப்ரியல் அட்டால்

பிரான்ஸ் நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகவும் வயது குறைந்த பிரதமராக கேப்ரியல் அட்டால் (Gabriel Attal) பதிவாகியுள்ளார்.

கடந்த 20 மாதங்களாக பிரதமராக பதவி வகித்த எலிசபெத் போன் (Élisabeth Borne) தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனால் இவர் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை கல்வியமைச்சராக பதவி வகித்த கேப்ரியல் அட்டால் பிரதமராக நியமிக்கப்பட்டமை அரசியல் அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளதாக நியுஸ்பெஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல்கள் ஜூன் மாதம் நடைபெறவுள்ள நிலையில், பிரான்ஸ் அரசாங்கத்தை வழிநடத்தும் பொறுப்பு கேப்ரியல் அட்டாலிடம் இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கத்தைக் கொண்டு தமது ஜனாதிபதி பதவியை மீளாய்வு செய்வதற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் இலக்கு வகுத்துள்ள நிலையிலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸின் நவீன வரலாற்றில் மிகவும் வயது குறைந்த பிரதமராக லோரன் பெயியுஸ் (Laurent Fabius) இடம்பிடித்திருந்தார். 1984ஆம் ஆண்டு ஜனாதிபதி பிரான்கொஸ் மிட்டரென்ட் (François Mitterrand) ஆல் பிரதமராக நியமிக்கப்படும் போது அவருக்கு 37 வயது.

Latest articles

Similar articles