தளபதி விஜய் தனது அடுத்த படத்திற்காக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் கைகோர்த்துள்ளதோடு, படப்பிடிப்பும் வேகமாக இடம்பெற்று வருகிறது.
இந்தப் படத்தின் ஹைதராபாத் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பே படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும், மேலும் படக் குழு தங்கள் குடும்பங்களுடன் புத்தாண்டுக்காக ஓய்வெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘தளபதி 68’ படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு இலங்கையில் இடம்பெறும் எனவும், ஜனவரி இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்புகள் ஆரம்பமாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. (Times of India)
இதற்கிடையில், ‘தளபதி 68’ படத்தின் முதல்பார்வை (First look and title) மற்றும் தலைப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
‘THE GREATEST OF ALL TIME’ தளபதி 68ற்கு பெயரிடப்பட்டுள்ளது.
