நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் அவரது நீண்ட நாள் நண்பர் அண்டனி தட்டிலுக்கும் திருமணம் என்ற தகவல் தீயாக பரவியது. ’இது என்ன மாயம்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான கீர்த்தி சுரேஷ், ரஜினி முருகன், பைரவா, தொடரி, ரெமோ, சர்க்கார், மாமன்னன் என பல படங்களில் நடித்து பிரபலமானார். இப்போது தெலுங்கு, இந்தி திரையுலகிலும் வலம் வந்துகொண்டிருக்கிறார்.
கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் என்கிற தகவல் கொலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டது. துபாயில் வசிக்கும், கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் அண்டனி தட்டில் என்பவரை கீர்த்தி கரம் பிடிக்கவிருக்கார் என்றும், இருவருக்கும் வரும் டிசம்பர் மாதம் கோலாகலமாகத் திருமணம் நடக்கவிருக்கிறது என்றும் தகவல் வெளியாகி வைரலானது.
இதற்கிடையில், கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது காதலர் அண்டனியை அறிமுகப்படுத்தி, 15 ஆண்டுகளாக காதலித்து வருவதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று குடும்பத்தாருடன் திருப்பதி கோயிலுக்கு சென்ற கீர்த்தி சுரேஷ், வழிபாடுக்குப் பிறகு கோயிலுக்கு வெளியே ஊடகவியலாளர்களைச் சந்தித்தார். அப்போது, “தற்போது தெறி படத்தின் ஹிந்தி பதிப்பான ‘பேபி ஜோன்’ படத்தில் நடித்து வருகிறேன். நீண்ட நாள்களுக்குப் பின் ஏழுமலையானை வழிபட்டது மனதுக்கு இதமாக உள்ளது. அடுத்த மாதம் எனக்கு திருமணம். திருமணம் கோவாவில் நடைபெறும்.” எனத் தெரிவித்திருக்கிறார். (CinemaVikatan with some inputs)
