ரஹ்மான், சைரா தம்பதி பிரிவு குறித்து பார்த்திபன் பதிவு

இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்வதாக் அவரின் மனைவி சாயிரா பானு நேற்று தனது சட்டத்தரணி மூலம் அறிவித்திருந்தார்.

இவர்களுக்கு கதிஜா, ரஹீமா, அமீன் என மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். 29 ஆண்டுகளுக்குப் பிறகு திருமண வாழ்விலிருந்து இருவரும் பிரிவதாக அறிவித்திருக்கும் இந்த தகவல் அவரின் இரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தன் எக்ஸ் பக்கத்தில், “பிரிவு: `இசை ஸ்வரங்கள் பிரிவதால் தான் பிறக்கும் ஒரு நாதமே… குடைக்குள் மழை’ நானெழுதி கார்த்திக் ராஜா இசைக்க, இசையே பாடியது. பிரிவு என்பது துக்கம் மட்டுமல்ல, புதிய அமைதியாகவும் பிறக்கலாம். நெருக்கம் நிகழ்த்திய சொர்க்கத்தை விட, மூச்சு முட்டும் புழுக்கமாகவும் மாறியதை சற்றே மாற்றி, விலகி நின்று அவரவர் விருப்பம் போல வாழ இனி(ய) வழியுள்ளதா என சம்மந்தப்பட்டவர்கள் ஆராயலாம். ஊர் கூடி உறவை கொண்டாடி வழியனுப்புதல் போலே, ஊர் விலகி ‘பிரிவு’ என்ற முடிவையும் சமமாய் மதித்து அமைதிக்கு உதவிட வேண்டும்!” எனப் பதிவிட்டிருக்கிறார்.

பார்திபனின் பதிவு – https://x.com/rparthiepan/status/1859036554364416389

Latest articles

Similar articles