தென் அமெரிக்க நாடான சிலியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 123ஆக அதிகரித்துள்ளது.
சிலி நாட்டின் வல்பரைசோ (Valparaiso) பகுதியில் உள்ள வனத்தில் சில தினங்களுக்கு முன்னர் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக பல ஆயிரக்கணக்கான வீடுகள் பற்றி எரிந்து தீக்கிரையாகியுள்ளன. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மீட்புப் பணிகள் மும்முரமாக்கப்பட்டிருப்பதாக நியுஸ்பெஸட் செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், 1931இல் நிறுவப்பட்ட பிரபல தாவரவியல் பூங்கா ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை தீக்கிரையானது.
சிலியில் ஏற்பட்டிருக்கும் காட்டுத் தீயானது, மற்ற லத்தீன் அமெரிக்க நாடுகளையும் பாதித்துள்ளது. சிலியின் கரையோர நகரங்களில் புகை சூழ்ந்ததால், அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. புகை மற்றும் தீப்பிழம்புகள் வினா டெல் மார் (Viña del Mar) என்ற நகரைச் சுற்றியுள்ள சுற்றுப்புறங்களை சூழ்ந்துள்ளன.
வினா டெல் மார் (Viña del Mar) நகரை சுற்றியுள்ள பகுதியில் 200 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீ பரவியது மலைக்காட்டுப் பகுதி என்பதால், அந்தப் பகுதிக்குச் சென்று தீயை அணைக்கும் பணியே மேற்கொள்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. எப்போதையும் விட அதிக வெப்பநிலை, குறைந்த ஈரப்பதம், வேகமாக வீசிய காற்று ஆகிய காரணங்களால் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் மீட்புக் குழுவினா் திணறி வருகின்றனர்.
இன்று (06) காலை நிலவரப்படி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 123ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
