“12 வருடம் முன்பு இது நடந்தபோதே…”, தன்யா விளக்கம்

ரஜினி கெளரவ கதாபத்திரத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள ‘லால் சலாம்’ படத்தில் நடிகை தன்யா நடித்துள்ளார்.

அவரது பெயரிலான பதிவு ஒன்றில் “தண்ணீருக்காக எங்களிடம் பிச்சை எடுக்கிறீர்கள். மின்சாரத்திற்காகப் பிச்சை எடுக்கிறீர்கள். எங்கள் பெங்களூரை ஆக்ரமித்து கொச்சைப்படுத்துகிறீர்கள். எங்களிடம் பிச்சை கேட்பதால். இதையும் தருகிறோம். உங்களுக்கு வெட்கமாக இல்லையா” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி ‘தமிழ் படங்களில் நடிக்க மாட்டேன்’ என்று தன்யா கூறியதகாவும் சமூகவலைதளங்கில் பேசுபொருளாகி ‘HateDhanya’ எனும் ஹாஷ்டாக் ட்ரெண்டிங்கானது.

12 வருடங்களுக்கு முன் நடந்த இந்த சர்ச்சைகள் தற்போது தன்யா ‘லால் சலாம்’ படத்தில் நடித்துள்ளதால் மீண்டும் பேசுபொருளாக ஆரம்பித்தது.

இந்நிலையில் தன்னைப் பற்றிய சர்ச்சைகளுக்கு விளக்கமளித்துள்ளார் தன்யா.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை👇

Latest articles

Similar articles