உலகின் முன்னணி ஸ்மார்ட் கைத்தொலைபேசி விற்பனையாளராக இருந்த சம்சங் நிறுவனத்தை அப்பிள் பின்னுக்குத் தள்ளியுள்ளது.
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஐபோன், அதன் தென்கொரிய போட்டியாளரின் 12 ஆண்டு கால வெற்றிப் பயணத்திற்கு முடிவு கட்டியுள்ளது.
ஐபோன் முதல் முறையாக உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட் கைத்தொலைபேசி விற்பனையாளராக மாறியுள்ளது.
இந்த வாரம் வெளியிடப்பட்ட சர்வதேச தரவு கூட்டமைப்பின் (International Data Corporation) தரவுகளுக்கு அமைய , தென் கொரிய நிறுவனத்தின் 226.6 மில்லியன் கைத்தொலைபேசிகளின் விற்பனையுடன் ஒப்பிடும்போது, ஐபோன் 2023இல் 234.6 மில்லியன் கைத்தொலைபேசிகளை விற்பனை செய்துள்ளது.
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம் சம்சங்கின் 19.4% சந்தைப் பங்கை விட 20.1% சந்தைப் பங்கைப் பெற்றுள்ளது.
