தனுஷ் நடிப்பில் ‘ராக்கி’, ‘சாணிக்காயிதம்’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பெரிய பொருட் செலவில் உருவாகியுள்ளத் திரைப்படம் ‘கெப்டன் மில்லர்’. சிவராஜ்குமார், குமரவேல், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் எனப் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் விழா நேற்று சென்னையில் இடம்பெற்றது.
இவ்விழாவில் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், “தனுஷ் சாரோட ‘கெப்டன் மில்லர்’ லுக் பார்த்ததும் பயமாக இருந்துச்சு. கர்ணன்னுக்குப் பிறகு தனுஷ் சார்கிட்ட படம் பண்றதுக்கு சைன் பண்ணினேன். ஆனா, நான் சில படங்களில் கமிட்டானதுல அது தள்ளிப்போயிருச்சு. அடுத்து தனுஷ் சார் கூட நான் பண்ணப்போற படம், ‘கர்ணன்’ படத்தைவிட பெருசா இருக்கணும்னு அதுக்கான வேலையத் தீவிரமா பாத்துக்கிட்டு இருக்கேன்.
நான் அதைப் பண்ணுவேன்னு தனுஷ் சாரும் என்னை பயங்கரமாக நம்புறாரு. என் கரியர்ல முக்கியமானப் படமா இருக்க மாதிரி பண்ணணும். எல்லாத்தையும் தாண்ட கூடிய படமா அதை பண்ணணும்.
‘சாணிக் காயிதம்’ படத்துக்கு முன்னாடியே அருண் மாதேஸ்வரேன்கூட படம் பண்றதாக தனுஷ் சார் சொன்னார். அப்போதான் புரிஞ்சது இந்த வாய்ப்புக்குப் பெரிய நம்பர்ஸ்லாம் வசூல் பண்ணியிருக்கணும்னு இல்ல. தனுஷ் சார் நம்புற சினிமாவை, அவரை திருப்திபடுத்துற மாதிரியான கதையைச் சொன்னாலே போதும்.
தூத்துக்குடில வெள்ளம் வந்தப்போ நான் அங்க போயிருந்தேன். அப்போ முதல் ஆளா எனக்குக் கால் பண்ணி விசாரிச்சவர் தனுஷ் சார்” எனப் பேசியுள்ளார் மாரி செல்வராஜ். (cinemavikatan)
