பாகிஸ்தானில் நிலநடுக்கம்

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கம் இன்று (22) அதிகாலையில் இஸ்லாமாபாத் மற்றும் பிற பகுதிகளை உலுக்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளது.

ராவல்பிண்டியை மையமாக கொண்டு 16 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்துள்ளன.

இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சமடைந்தாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. (tamilwin.com)

Latest articles

Similar articles