போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் டிசம்பர் 17 மற்றும் 31ற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 20,000ற்கும் மேற்பட்டவர்களை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
20,797 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 1,018 பேர் மேலதிக விசாரணைகளுக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
போதைப்பொருளுக்கு அடிமையான 1,298 பேர் புனர்வாழ்விற்காக அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
நடவடிக்கைகளின் போது போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு சொந்தமான சொத்துக்களை பொலிஸார் கைப்பற்றியதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
