யாழில் தீ விபத்து; மலையகத்தைச் சேர்ந்த இருவர் பலி

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை முனைப் பகுதியில் அமைந்துள்ள களஞ்சியசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (02) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

கடற்றொழில் உபகரண களஞ்சியசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக எமது பிராந்திய ஊடகவியலாளர் தெரிவிக்கின்றார்.

இராகலை – உடப்புசல்லாவை தோட்டத்தைச் சேர்ந்த வேலாயுதம் புவனேஸ்வரம் (வயது 46) வேலாயுதம் ரவி (வயது 38) ஆகிய இருவருமே சம்பவத்தில் உயிரிழந்தவர்களாவர்.

தீப்பற்றியமைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Latest articles

Similar articles