பண்டிகைக் காலங்களில் அதிக கொண்டாட்டங்களை முன்னிட்டு, மதுபோதையில் வாகனத்தை செலுத்தும் நபர்களை கைது செய்ய 24 மணி நேர சிறப்பு நடவடிக்கையை இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது.
பொலிஸ் ஊடக அறிக்கை;
“மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்ய 24 மணி நேரமும் நடவடிக்கைகள்.
இந்த பண்டிகைக் காலத்தில், மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யும் பணியில் பொலிஸ் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
“நாடளாவிய ரீதியில் பண்டிகைக் காலங்களில் அதிக வாகன விபத்துக்கள் பதிவாகி வருவதால், பொதுமக்களின் பெறுமதியான உயிர்கள் மற்றும் உடமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைவாக இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
“உங்களது வாகனத்தை நிறுத்துமாறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வழங்கிய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, நடத்தப்படும் சோதனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கை பொலிஸாகிய நாங்கள் உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.”
