2023ஆம் ஆண்டிற்கான வணிக நிறுவனங்கள், மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதற்கான அளவுகோல்களை நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, 2022ஆம் ஆண்டு நிதியாண்டில் இலாபம் ஈட்டியிருந்தால் மாத்திரமே மேற்படி நிறுவனங்களின் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட வேண்டுமென அறிவித்துள்ளார்.
வரிக்குப் பிந்தைய இலாபத்தில் குறைந்தபட்சம் 30 வீதத்தை ஒருங்கிணைந்த நிதிக்கு செலுத்தியிருந்தால் போனஸ் செலுத்த முடியும் என அவர் மேலும் கூறியுள்ளார். (newswire.lk)
