துறைமுக நகரத்தில் இயங்கும் கொமர்ஷல் வங்கி

இலங்கையின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான கொமர்ஷல் வங்கி பிஎல்சிக்கு கொழும்பு துறைமுக நகரமான 69 ஹெக்டேர் சிறப்புப் பொருளாதார வலயத்தில் வெளிநாட்டு வங்கிச் சேவைகளை வழங்குவதற்கான அங்கீகரிக்கப்பட்ட உரிமம் அண்மையில் வழங்கப்பட்டது. நாட்டின் பொருளாதார நிலப்பரப்பை மாற்றும் பல நாணய சர்வதேச வணிகம் மற்றும் நிதிச் சேவை கேந்திர நிலையமாக இந்த பொருளாதார வலயம் அமைந்துள்ளது.

இந்த AP உரிமம் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவினால் வங்கிக்கு வழங்கப்பட்டது.

கொமர்ஷல் வங்கியானது கொழும்பு துறைமுக நகரத்தின் எல்லைக்குள்ளும் வெளியிலும் இயங்குவதற்கு வழி வகுத்துள்ளதுடன் முதலீட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வங்கிச் சேவைகளை வழங்குகிறது.

‘இலங்கையில் மத்திய வங்கியினால் நியமிக்கப்பட்டுள்ள உயர் தரம்கொண்ட ஒரே தனியார் துறை வங்கியாக உள்நாட்டு அமைப்பு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த வங்கி அல்லது D-SIB வங்கயான கொமர்ஷல் வங்கி கொழும்பு துறைமுக நகரத்தில் பிரசன்னத்தை நிலைநாட்ட எதிர்பார்க்கப்படும் நிறுவனங்களின் நிதித் தேவைகளுக்குச் சிறந்த முறையில் சேவையாற்றுகிறது. பெருநிறுவனங்கள் மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு பதிலளிப்பதில் எங்களுக்கு விரிவான அனுபவம் உள்ளது பெருநிறுவன மற்றும் சில்லறை வங்கித் தேவைகளுக்கு சேவை செய்யும் உயர்-மேம்பட்ட உலகத் தரம் வாய்ந்த டிஜிட்டல் வங்கித் தளங்களைக் கொண்டுள்ளோம் மேலும் கொழும்பின் வளர்ச்சியை எளிதாக்குவதில் முக்கிய பங்கை வகிக்க எதிர்பார்த்துள்ளோம்.’ என விசேட பொருளாதார வலயத்தில் செயற்படுவதற்கு அங்கீகாரம் பெற்ற முதலாவது வங்கியாக தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்ட கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி சனத் மனதுங்க தெரிவித்துள்ளார். (adaderana.lk)

Latest articles

Similar articles