இறுதி யுத்த காலத்தில் வெள்ளைக் கொடிகளுடன் வந்த தமிழர்களை கொன்றொழித்த ராஜபக்ச தரப்பே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியிலும் உள்ளதாக தமிழ்த் தேசிய அரசியல் தலைவர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
“உயிர்த்த ஞாயிறு போன்ற ஒரு தேசிய பாதுகாப்பு பிரச்சினையை உருவாக்கியதே ராஜபக்ச குடும்பம் தான்” என நாட்டு மக்கள் அறிவார்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது இலங்கையில் ஒரு தேசிய பாதுகாப்பு பிரச்சினையை தோற்றுவித்திருந்ததாகவும், கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வரும் நோக்கில் ராஜபக்ச குடும்பமே இவ்வாறானதொரு பிரச்சினையை உருவாகியுள்ளமை தற்போது அம்பலமாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
