ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வடக்கிற்கு விஜயம் செய்யும் நாட்களில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக கருதப்படும் 8 பேருக்கு எதிராக பொலிஸாரால் கோரிய தடை உத்தரவுகளை வழங்க மறுத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் ஜனநாயக போராட்டங்களை தடை செய்ய முடியாது என தெரிவித்துள்ளது.
சட்டத்தை மீறாத வகையில், ஜனநாயக ரீதியில் எதிர்ப்பில் ஈடுபடுவதற்கான உரிமை உள்ளதாகவும் நீதிமன்றம் இதன்போது அறிவித்துள்ளது.
ஜனாதிபதி நாளை இன்று முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரை வட மாகாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதற்கு தடை விதிக்கக் கோரியே யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
