வைத்திய அலட்சியம் தொடர்பாக 600 முறைப்பாடுகள்

வைத்திய அலட்சியம் தொடர்பில் வருடாந்தம் சுமார் 600 முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுவதாகவும், இதில் வைத்தியர்கள் உட்பட சுகாதார ஊழியர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

பேராதனை போதனா வைத்தியசாலையில் அண்மையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதாரத்துறையில் வைத்திய அலட்சியம் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பது குறித்து சுகாதார அமைச்சர் கவலை வெளியிட்டுள்ளார்.

இது நோயாளிகளின் நலனுக்கான துறையின் அர்ப்பணிப்பு பற்றிய கேள்விகளை எழுப்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தரமான சுகாதார சேவையை வழங்குவதில் வைத்தியசாலை ஊழியர்கள், குறிப்பாக வைத்தியர்கள் ஆற்றிய முக்கிய பங்கை அவர் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், நோயாளிகளின் முறைப்பாடுகளின் முழுமையான பகுப்பாய்வில் பல தவறுகள் கண்டறியப்பட்டதாக அமைச்சர் பத்திரன சுட்டிக்காட்டியுள்ளார்.

சுகாதாரத் துறை சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், மக்களுக்கான சேவையை முன்னுரிமைப்படுத்துமாறும், நோயாளிகளின் நல்வாழ்வை உறுதிசெய்வதில் அவர்களின் அர்ப்பணிப்பை மறுபரிசீலனை செய்யுமாறும் அமைச்சர் ரமேஷ் பத்திரன ஊழியர்களை வலியுறுத்தியுள்ளார். (dailymirror.lk)

Latest articles

Similar articles