முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றவியல் விசாரணை திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய Human Immunoglobulin மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு சென்றிருந்தார்.
வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்ட நிலையில், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, இன்று காலை முதல் திணைக்களத்திற்கு முன்பாக சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் குழுமியிருந்ததுடன், அவர்கள் கெஹலிய ரம்புக்வெல்லவை கைது செய்யுமாறு சாத்வீக முறையில் எதிர்ப்பிலும் ஈடுபட்டனர்.
