இலங்கையில் காற்றின் தரம் குறைந்துள்ளது, விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கொழும்பு உட்பட இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு அதிகரித்துள்ளதாக (காற்று மாசு அதிகரிப்பு) மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலையின் விளைவாகவே இருண்ட வானிலை நிலவுவதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் ஊடகப் பேச்சாளர் பேராசிரியர் அஜித் குணவர்தன தெரிவித்தார்.

இலங்கையின் காற்றின் தரச் சுட்டெண் பொதுவாக 50 இன் பெறுமதிக்குக் குறைவாக உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், எவ்வாறாயினும், அண்மைய கடும் மழை காரணமாக, பல பகுதிகளில் தூசி அல்லது மூடுபனி போன்ற வானிலை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதகமான வானிலை காரணமாக வடக்கில் இருந்து காற்று மாசுபாடுகள் மற்றும் எல்லை தாண்டிய காற்று மாசுபாடு காரணமாக இது ஏற்பட்டதாக பேராசிரியர் அஜித் குணவர்தன தெரிவித்தார்.

இந்நிலைமை காரணமாக அனுராதபுரம், யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு பிரதேசங்களில் காற்றின் தரச் சுட்டெண் 180 ஆக அதிகரித்துள்ளது என பேராசிரியர் அஜித் குன்வர்தன தெரிவித்துள்ளார்.

வளிமண்டலத்தில் தூசி துகள்கள் அதிகரிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பதாகக் கூறிய அவர், சுவாச நோய்கள் உள்ளவர்கள் விழிப்புடன் இருக்கவும், பாதிக்கப்பட்டால் வைத்தியரை அணுகுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

Latest articles

Similar articles