இலங்கையின் 10ஆவது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இன்று உரையாற்றினார்.
ஜனாதிபதியின் அரசாங்க கொள்கை விளக்க உரையின் 12 முக்கிய விடயங்கள்
- டிசம்பரில் ஒரு இடைக்கால கணக்கு மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
- 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் அடுத்த வருடம் பெப்ரவரியில் தாக்கல் செய்யப்படும்.
- அடுத்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் மூலம், அஸ்வெசும சமூக நலத்திட்டத்தின் கொடுப்பனவு மற்றும் பொதுத்துறை ஊழியர்களின் சம்பளத்தை அரசாங்கம் அதிகரிக்கவுள்ளது.
- அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம், பாடசாலைப் பொருட்களை வாங்குவதற்கான கொடுப்பனவுகளை அரசாங்கம் வழங்கும்.
- தகவல் தொழில்நுட்பம் தொடர்பான ஏற்றுமதிகளை ஆண்டுக்கு 5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்தும் நோக்கத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையை பணியாளர்கள் 200,000 ஆக அதிகரிக்கப்படும்.
- சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வெளிநாட்டு நிதி வசதி (EFF) தொடர்பான மூன்றாவது பணியாளர் நிலை ஒப்பந்தத்தில் இந்த வெள்ளிக்கிழமை (23 நவம்பர்) கையெழுத்திட அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
- இலங்கையில் இனவாத அரசியலுக்கோ அல்லது மத தீவிரவாதத்திற்கோ மீண்டும் இடமில்லை என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
- பொருளாதார நன்மைகள் மக்களிடையே நியாயமான முறையில் விநியோகிக்கப்பட வேண்டும் எனவும் சந்தை ஏகபோக உரிமைகள் இல்லாதொழிக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
- மக்களின் நலனுக்காக வினைத்திறன்மிக்க அரச சேவையொன்று உருவாக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
- அரசியல்வாதிகள், நிறைவேற்று அதிகாரிகள் உட்பட அனைவரும் சட்டத்திற்கு அமைய செயற்பட வேண்டும் என ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- ஊழல் குற்றவாளிகள் சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள் எனவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.
- தூய்மையான இலங்கை வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக செயலணியொன்று உருவாக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
