யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிகளை உரிமையாளர்கள் சென்று பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது.
1990ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் உரிமையாளர்கள் தமது காணிகளைச் சென்று பார்வையிட்டனர்.
ஜே – 235 காங்கேசன்துறை வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் 20.32 ஏக்கர் காணியும், ஜே – 240 தென்மயிலை கிராம சேவையாளர் பிரிவில் 25.02 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உயர் பாதுகாப்பு வலயமாக பாதுகாப்பு தரப்பினரது கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் ஒரு தொகுதி காணி நிலங்கள் விடுவிக்கப்பட்டதற்கான ஆவண பத்திரங்கள் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இதற்கமைய 93 பேருக்கு சொந்தமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
மூன்று தசாப்தங்களின் பின்னர் தமது சொந்தக் காணிகளில் கால்வைத்த மக்கள் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். அதனை காணொளியில் காண்க👆
