வெடுக்குநாறி மலைக்கு தேரர்களை அழைத்துச் சென்ற இராணுவம்

பௌத்த தேரர்கள், இராணுவத்தினர் உள்ளிட்ட குழுவினர் வுவுனியா வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயம் அமைந்துள்ள இடத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

வெடுக்குநாறிமலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த விக்கிரகங்கள் கடந்த வருடம் மார்ச் மாதம் தகர்த்து எறியப்பட்டிருந்தன.

இந்தநிலையில், பொது மக்களின் பாரிய ஆர்பாட்டங்களுக்கு பின்னர் நீதிமன்றினால் குறித்த ஆலயத்தின் விக்கிரகங்களை மீள பிரதிஷ்டை செய்து வழிபாடுகளில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயப் பகுதிக்கு இன்றைய தினம் இந்த குழு சென்றுள்ளது.

இராணுவத்தினர் தமது உழவு இயந்திரத்தில் குறித்த குழுவினரை அழைத்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வுவுனியா வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆயலம் அமைந்துள்ள பகுதி பௌத்த தொல்லியல் முக்கியத்துவம்வாய்ந்த இடம் எனக் குறிப்பிடப்படுகின்றமையால் சர்ச்சைகள் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest articles

Similar articles