பொலிஸாரால் சித்திரவதைக்கு உள்ளான தமிழ் மாணவன் (ஒரு நேரடி வாக்குமூலம்)

“இன்னுமொரு அலெக்சாக என்னை வட்டுக்கோட்டை பொலிஸார் கொன்றுவிடுவார்கள் என்ற பயத்திலேயே அங்கிருந்து ஓடி வந்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்தேன்.” என யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலுக்குள்ளான யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் கருணாகரன் நிதர்ஷன் தெரிவித்துள்ளார்.

தனது உயிரை காப்பாற்றுமாறு கோரி இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“எனக்கு ஏதும் நடந்தால் வட்டுக்கோட்டை பொலிஸாரே முழுமையான பொறுப்பினையும் ஏற்க வேண்டும்.” எனவும் அவர் தெரிவித்தார்.

Latest articles

Similar articles