தமிழ் மக்களின் உரிமைக்காக, தேசிய இருப்பிற்காக தொடர்ந்து பொறுப்புடன் செயற்படுவதாக தெரிவித்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழ்த் தேசிய சிந்தனையுடன் செயற்படும் ஏனையவர்களுடனும் இணைந்து செயற்பட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவாகியுள்ள எம்.பி சிவஞானம் சிறீதரனுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த தலைமைக்கு பதிவிக்கு போட்டியிட்ட மற்றுமொரு வேட்பாளரான எம்.பி, எம். ஏ. சுமந்திரன், தலைவராக சிறிதரனம் முன்னெடுக்கும் அனைத்துப் பணிகளுக்கும் தன்னுடைய ஒத்துழைப்பை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இன்று (21) காலை கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் ஆரம்பமாகிய நிலையில், தலைவருக்கான இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்றது.
இதில் அக்கட்சியின் புதிய தலைவராக சிவஞானம் சிறீதரன் 184 வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு எம்.ஏ.சுமந்திரன் 137 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
கட்சியின் தலைவர் பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் போட்டியிட்ட நிலையில், யோகேஸ்வரன் போட்டியிலிருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
