ஒரு மில்லியன் இலங்கையர் வரி செலுத்துவதற்காக பதிவு

இலங்கையில் வரி செலுத்துவோர் அடையாள எண்ணுக்கு (TIN) பதிவு செய்யும் நபர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு மில்லியனை எட்டியுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, 2022 நிதியாண்டில், 204,467 தனிநபர் வரிக் கோப்புகள் மாத்திரமே காணப்பட்டன.

இருப்பினும், அண்மைய தரவு ஒரு குறிப்பிடத்தக்க எழுச்சியை காட்டுவதாகவும், எண்ணிக்கை இப்போது ஒரு மில்லியனை நெருங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வரி செலுத்தும் நிறுவனங்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க உயர்வு காணப்படுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

“இந்த ஆண்டு பாராட்டத்தக்க 10 சதவீத அதிகரிப்பைக் எட்டியுள்ளது, 2022இல் பதிவுசெய்யப்பட்ட 73,444 வரி செலுத்தும் நிறுவனங்களில் இருந்து நவம்பர் 30 தகவல்களுக்கு அமைய மொத்தமாக அது 81,909ஆக உயர்ந்துள்ளது.”

Latest articles

Similar articles