மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் கணக்கெடுப்புப்பாய்வுப் பிரிவான சோஷல் இன்டிகேட்டரினால் (SI) நடாத்தப்பட்ட ஜனநாயக ஆட்சித் தொடர்பான நம்பிக்கைச் சுட்டி (அலை 5) கணக்கெடுப்பாய்விற்கு அமைய, பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தையும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தையும் பொதுமக்கள் முற்றாக நிராகரிக்கின்றமை தெரியவந்துள்ளது.
நாடளாவிய ரீதியிலான இந்த கணக்கெடுப்பாய்வானது நாட்டின் தற்போதைய ஆட்சி நிலை குறித்து பொதுமக்களின் அபிப்பிராயங்களை அறியும் நோக்கில் 2023 நவம்பர் 06 ஆம் திகதி முதல் நவம்பர் 29 ஆம் திகதி வரை நடத்தப்பட்டது.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்து அறிந்துள்ளதாக 38.5 வீதமானவர்கள் தெரிவித்துள்ளனர், இவர்களில் 72 .6 வீதமானவர்கள் தாங்கள் அதனை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்து அறிந்துள்ளதாக 28.4 வீதமானவர்கள் தெரிவித்துள்ளனர் இதேவேளை 71.1 வீதமானவர்கள் தாங்கள் அதனை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளனர்.
