சிகரெட் மற்றும் மதுபான வரி அதிகரிப்பின் மூலம் இலங்கைக்கு 22 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதி விசேசம் சாராய போத்தல் ஒன்றின் விலை 244 ரூபாயினாலும், தென்னஞ் சாராயம் போத்தல் ஒன்றின் விலை 224 ரூபாயினாலும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள் 266 ரூபாயினாலும், 5 சதவீதத்துக்கும் குறைவான மதுபானம் 21 ரூபாயினாலும், 5 சதவீதத்திற்கு மேல் உள்ள மதுபானம் 39 ரூபாயினாலும், வயின் 50 ரூபாவியினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
84 மில்லிமீட்டருக்கு மேல் உள்ள சிகரெட் 90 ரூபாயில் இருந்து 105 ஆகவும், 72 முதல் 84 மில்லிமீட்டருக்கு இடைப்பட்ட சிகரெட் 85இல் இருந்து 100 ரூபாயாகவும், 67 முதல் 72 மில்லிமீட்டருக்கு இடைப்பட்ட சிகெரெட் 70லிருந்து 80 ரூபாயாகவும், 60 முதல் 67 மில்லிமீட்டருக்கு இடைப்பட்ட சிகெரெட் 60லிருந்து 70 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் 60 மில்லிமீட்டருக்கு கீழ் உள்ள சிகெரெட் 15லிருந்து 24 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பீடி ஒரு குச்சியின் விலை 2 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
