இன்று காலை 06.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ‘யுக்திய’ விசேட நடவடிக்கையில் 1,200 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொது பாதுகாப்பு அமைச்சின் அறிக்கைக்கு அமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் (STF) 1,229 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
440 கிராம் ஹெரோயின், 260 கிராம் ஐஸ், 15 கிலோ கஞ்சா மற்றும் 417 போதை வில்லைகள் ஆகியவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இலங்கையில் பாதாள உலக மற்றும் போதைப்பொருள் தொடர்பான செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் ‘யுக்திய’ எனும் விசேட நடவடிக்கை 2023 டிசம்பர் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
பாதாள உலக தலைவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு சொந்தமான பெருமளவிலான போதைப் பொருட்கள் மற்றும் சட்டவிரோதமாக பெறப்பட்ட சொத்துக்கள் இதுவரை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
