ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பல்வேறு சிறைகளில் இருந்த 44 இலங்கையர்களுக்கு அந்நாட்டு அரச கட்டளையினால் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைக் கைதிகள் டிசம்பர் 2ஆம் திகதி கொண்டாடப்பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் 52வது தேசிய தினத்தின் போது அரச உத்தரவின் மூலம் மன்னிப்பை பெற்றுக்கொண்டதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிவிவகார அமைச்சு, அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அரச மன்னிப்பைப் பெற்ற இந்த 44 இலங்கையர்கள் உரிய காலத்தில் ஐக்கிய அரபு அமீரக அரசினால் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளனர்.
இலங்கையர்களுக்கு மன்னிப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டமைக்காக, ஐக்கிய அரபு அமீரக அரசு மற்றும் அதன் வெளிவிவகார மற்றும் உள்விவகார அமைச்சுகளுக்கு தனது நன்றியை தெரிவிப்பதாக அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதுவர் உதய இந்திரரத்ன குறிப்பிட்டுள்ளார்.
