2024 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கு தாம் தற்போது தயாராகி வருவதாக பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தம்மிக பெரேரா, ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 10 பணிகளை வழங்கியுள்ளதாகவும், தற்போது அந்த பணிகளை நிறைவேற்றுவதற்கு தன்னை தயார்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
“ஐந்து வருடங்கள் என்பது உண்மையில் 9,600 மணித்தியாலங்கள், இந்த 9,600 மணித்தியாலங்களில் இந்தப் பணிகளை எப்படி முடிப்பது என்று நான் திட்டமிட வேண்டும். இந்த நேரத்திற்குள் நான் இந்த பணிகளை எவ்வாறு முடிக்கப் போகிறேன் என தற்போது நான் திட்டமிட்டுள்ளேன்,” என அவர் கூறியுள்ளார்.
“ஒக்டோபர் 12ஆம் திகதி 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான கடைசித் திகதியாகும். இன்னும் 286 நாட்கள் உள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிபந்தனைகளுக்கு இணங்க நான் தற்போது என்னை தயார்படுத்திக் கொண்டுள்ளேன், அது முடிந்ததும், தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அவர்கள் அறிவிப்பார்கள்.” என அவர் மேலும் தெரிவித்தார்.
