பொலிஸார் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு; விசாரணை ஆரம்பம்

வெலிகம பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொழும்பு குற்றப்பிரிவின் (CCD) பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

அதிகாரிகள் சந்தேகநபர்களுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.

துரதிர்ஷ்டவசமாக, இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மற்றொரு பொலிஸ் குழு, அதிகாரிகளை குற்றவாளிகள் என தவறாகக் கருதி, ஹோட்டலுக்கு அருகே அவர்களது வெள்ளை வேன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.

விசேட விசாரணை இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதிகாரியின் மரணம் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் விளைவினால் இடம்பெற்றதா என்பதை பொலிஸ் ஊடகப் பேச்சாளரால் உறுதிப்படுத்த முடியவில்லை.

பிரதேச பொலிஸ் குழு வருவதற்கு முன்னர் சந்தேகநபர்கள், வேன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் குறிப்பிடப்படுகிறது.

Latest articles

Similar articles