காணாமல்போன 2 பெண்கள் 3 மாதங்களுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டனர்

ஒக்டோபர் முதலாம் திகதி மாவத்தகம மற்றும் கலகெதர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடுகளில் இருந்து காணாமல் போன இரண்டு இளம் பெண்கள் நேற்று (25) காலை மாத்தறை உயன்வத்தையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

18 மற்றும் 19 வயதுடைய பெண்கள், தமது தற்காலிக வசிப்பிடமான தங்கும் விடுதியொன்றில் இருந்து விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்த போது, மாத்தறை பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

சுமார் மூன்று மாதங்களாக அவர்கள் காணாமல்போயிருந்த நிலையில், அதற்கான சரியான காரணங்கள் எதுவும் வெளியாயாகவில்லை. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (newswire.lk)

Latest articles

Similar articles