நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டமையானது இலங்கையில் மனித உரிமைகளுக்கு பெரும் பாதிப்பாக அமைந்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
“கருத்துச் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கும், கருத்து வேறுபாடுகளை அடக்குவதற்கும் பயன்படுத்தக்கூடிய அரசாங்கத்தின் ஆயுதக் களஞ்சியத்தில் இந்தச் சட்டம் புதிய ஆயுதமாகும். அதிகாரிகள் உடனடியாக அதை மீளப் பெற்று, நாட்டில் உள்ள அனைவரின் மனித உரிமைகளுக்கும் மதிப்பளிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
“சட்டத்தின் பல பகுதிகள் சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகளை பூர்த்தி செய்யவில்லை, அவை இணையத்தில் கருத்துச் சுதந்திரம் மற்றும் தனியுரிமைக்கான உரிமைகளை அனுபவிப்பதைக் கட்டுப்படுத்தும்.
“கருத்துச் சுதந்திரம் மற்றும் தனியுரிமைக்கான உரிமைகள் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையால் (ICCPR) உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
“இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளின் தாக்கம் ஆகியவற்றின் போது மக்கள் சிரமங்களுக்கு மத்தியில் தமது கவலைகளை வெளிப்படுத்தும்போது, இந்த சட்டம் அதிகாரிகளால் தவறாகப் பயன்படுத்தப்படும் என்பதோடு குடிமை இடத்தை மேலும் கட்டுப்படுத்தவும், விமர்சகர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களை ஒடுக்கவும் பயன்படுத்தப்படும்.
“ தேர்தல் வருடத்தில், எதிர்ப்புக்களை முறியடித்த நீண்ட வரலாற்றைக் கொண்ட, இலங்கை அதிகாரிகள், தேர்தலுக்கு முன்னரும், தேர்தலின் போதும், பின்னரும் மனித உரிமைகளுக்கு உத்திரவாதமளிப்பதன் ஊடாக தமது சர்வதேச மனித உரிமைக் கடமைகள் மற்றும் கடப்பாடுகளை நிலைநாட்டுவதற்கான அரசியல் விருப்பத்தை வெளிப்படுத்த வேண்டும்.” என சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/amnestysasia/status/1750213340482428978
