இலங்கை மின்சார சபை ஊழியர்கள் 66 பேர் பணி இடைநீக்கம்

இலங்கை மின்சார சபையின் சுமார் 66 ஊழியர்கள் இந்த வருட ஜனவரி ஆரம்பத்தில் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டமைக்காக இதுவரை பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

முதற்கட்டமாக காசாளர்களாக பணியாற்றிய 15 ஊழியர்கள் பணி இடைநிறுத்தப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார்.

சுகயீன விடுமுறை நுகர்வோருக்கு இடையூறு ஏற்படும் வகையில் அவர்கள் செயற்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

மேலதிக விசாரணைகள் மேலும் 51 ஊழியர்களின் பணி இடைநிறுத்தத்திற்கு வழிவகுத்ததாகவும், அவர்களின் நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு கடுமையான அசௌகரியத்தை ஏற்படுத்தியதாகவும் கண்டறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்சார சபையின் மறுசீரமைப்பு மற்றும் தனியார்மயமாக்கலுக்கு எதிராக, ஜனவரி 03, 2024 முதல் நடத்தப்பட்ட மின்சார சபையின் ஐக்கிய தொழிற்சங்கக் கூட்டணியின் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு சேவைக்கு இடையூறு ஏற்படுத்தும் ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மின்சார சபை நிர்வாகத்திற்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

Latest articles

Similar articles