இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிதி வசதிகள் சுமார் 12 பில்லியன் ரூபாய்கள் என்பதோடு ஊழியர்களுக்கான கடன் வட்டியில் 2/3 பங்கு மின்சார சபை மூலமே செலுத்தப்படுவதும் தெரியவந்துள்ளது.
இதுத் தொடர்பில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“இரண்டு வாரங்களுக்கு முன்னர் நான் இலங்கை மின்சார சபையின் (CEB) நிர்வாகத்திடம் ஊழியர்களுக்கு வழங்கப்படும் கடன் வசதிகள் மற்றும் புதிய ஆட்சேர்ப்புகள் பற்றிய தகவல்களைக் கோரினேன்.
“மின்சார சபையின் நிதிப் பிரிவினால் வழங்கப்பட்ட தரவுகள், ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிதி வசதிகள் சுமார் 12 பில்லியன் ரூபாய்கள் மற்றும் ஊழியர்களுக்கான கடன் வட்டிக் கூறுகளில் 2/3 பங்கு மின்சார சபை மூலம் செலுத்தப்படுகிறது என்பதைக் காட்டுகிறது.
“மின்சார சபை அதன் ஊழியர்களின் சார்பாக செலுத்தும் வட்டி நுகர்வோர் கட்டணங்களிலிருந்து மீட்டெடுக்கப்படுகிறது.
“கடன் பெற்ற பயனாளிகளிடம் இருந்து கடன் மற்றும் வட்டித் தொகையை மீளப்பெறவும் அதை மின்சார நுகர்வோருக்கு வழங்காமல் இருக்கவும் ஒரு பொறிமுறையை செயல்படுத்துமாறு மின்சார சபை நிர்வாகத்திற்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
“எதிர்காலத்தில் வெளியார் செய்யக்கூடிய சேவைகளை மகவும் திறமையாகவும், செலவைக் குறைக்கும் வகையிலும் பெற்றுக்கொள்வது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அவர்களிடம் கேட்டுள்ளேன்.”

Two weeks ago I requested the CEB management for information regarding loan facilities extended to CEB employees & on new recruitments. Data provided by the CEB finance division shows that financial facilities extended to CEB employees amounts to about Rs 12 Billion & that 2/3rds… pic.twitter.com/CHzhGiMldi
— Kanchana Wijesekera (@kanchana_wij) January 20, 2024
