முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் நேற்று (19) அடையாளம் காணமுடியாத நிலையில் மனித சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
முள்ளிவாய்க்கால் இராணுவ முகாம் அமைந்துள்ள கடற்கரை பகுதியில் குறித்த சடலம் கரை ஒதுங்கியுள்ளது.
சடலம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் மாவட்ட வைத்திய சட்டவைத்திய அதிகாரி சடலம்தடையங்களை பரிசோதனை செய்துள்ளார்.
இதன்போது சடலத்தின் ஆடைப்பையில் இருந்து பங்களாதேஷ் நாட்டு நாணயத்தாள்கள் காணப்பட்டுள்ளதால், உயிரிழந்தவர் பங்களாதேஷ் நாட்டவராக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலத்தை மாவட்ட வைத்தியசாலையின் பிரேத பரிசோதனை அறையில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பங்களாதேஷ் மற்றும் இந்திய தூதரகங்களுக்கு அறிவிக்குமாறு நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
