மூடப்பட்ட 14,000 பண்ணைகள், 104 ஆடுகள் இறந்தது எப்படி?

இலங்கையில் 14,000 கால்நடை பண்ணைகள் பல்வேறு காரணங்களால் அண்மையில் மூடப்பட்டுள்ளதாகவும், அவற்றில் பெரும்பாலான பண்ணைகள் சிறிய அளவிலானவை எனவும் அரசாங்கக் கணக்குகள் தொடர்பான நாடாளுமன்றக் குழு (கோபா) குழு கூறுகிறது.

கால்நடை திருட்டு அதிகரித்துள்ளமையினால் பல பண்ணைகள் மூடப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் தலைவர் தெரிவிக்கின்றனர்.

இது ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் எனக் கூறிய கோபா குழு, கால்நடைகளுக்கு தேவையான மேய்ச்சல் நிலங்களை அழிப்பதும், நிலம் தொடர்பான பிரச்சினைகளும் இதற்குக் காரணம் எனக் கூறியது.

இது தொடர்பாக தெளிவான தரவுகளை பராமரிக்குமாறு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறைக்கு குழு அறிவுறுத்தியது.

அவுஸ்திரேலியாவில் இருந்து இயோலுதண்ட மற்றும் தெலஹெர ஆடு வளர்ப்பு நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்ட நூற்று நான்கு ஆடுகள் இறந்தமை குறித்தும் குழு அவதானம் செலுத்தியுள்ளது.

இதுத் தெடர்பில் உடனடியாக அறிக்கை வழங்குமாறு குழுவின் தலைவரான இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண பரிந்துரைத்துள்ளார்.

மில்கோ நிறுவனத்திற்கு நாளாந்தம் கிடைக்கும் பால் அளவு பாரியளவில் குறைந்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இதன்போது சுட்டிக்காட்டினார்.

பால் உற்பத்தி தொடர்பான தேசிய கொள்கையை தயாரிப்பதிலும் கோபா குழு கவனம் செலுத்தியது.

அரசாங்கக் கணக்குகள் தொடர்பான நாடாளுமன்றக் குழு (கோபா) கடந்த 11ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தலைமையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடியமை குறிப்பிடத்தக்கது.

Latest articles

Similar articles