அனைத்து இலங்கையர்களுக்கும் இ-பாஸ்போர்ட்; BIA’இல் பயோமெட்ரிக் சோதனை

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் தமது பதுகாப்பு கட்டமைப்பை மேலும் பலப்படுத்தும் பணிகளை முன்னெடுத்துள்ளது.

விமான நிலையத்தில் பயோமெட்ரிக் தானியங்கி முக அடையாளம் காணும் அமைப்பு மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் இ-கடவுச்சீட்டு ஆகியவற்றை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதன் ஊடாக இலங்கை பாதுகாப்பு மற்றும் பயணத்திறனை அதிகரிக்கின்றது.

குறித்த அமைப்பை விமான நிலையம் பொலிஸுடன் இணைந்து நிறுவியுள்ளதாக நியுஸ்பெஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் வாரங்களில் விமான நிலையம் தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதோடு, உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் அனைத்து பயணிகளுக்கும் கட்டாய தானியங்கி முக அடையாளம் காணும் அமைப்பை அறிமுகப்படுத்தவுள்ளது.

அதில் கைரேகை மற்றும் புகைப்படம் ஸ்கேன், துல்லியமான அடையாளத்தை உறுதி செய்தல் மற்றும் விமான நிலைய பாதுகாப்பை மேலும் பலப்படுத்துதல் ஆகியவை அடங்கும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

மின்னணு முறையிலான கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான முதற் கட்ட நடவடிக்கையை திணைக்களம் நிறைவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து இலங்கை பிரஜைகளும் இந்த வருட இறுதிக்குள் பாரம்பரிய காகித பதிப்புகளுக்கு பதிலாக இ-கடவுசீட்டுக்களைப் பெற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Latest articles

Similar articles